சமூர்த்தி வேலைத்திட்டங்கள்
- சமூர்த்தி அட்டை வௌியிடுதல்
- சமூர்த்தி முத்திரை சார்ந்த மற்றும் நிர்வாக நடவடிக்கைகள்
- சமூர்த்தி காப்புறுதி சார்ந்த மற்றும் நிர்வாக நடவடிக்கைகள்
- சமூர்த்தி சீட்டிலுப்பு சார்ந்த மற்றும் நிர்வாக நடவடிக்கைகள்
- சமூர்த்தி நிகழ்ச்சித்திட்டங்கள் சார்ந்த மற்றும் நிர்வாக நடவடிக்கைகள்
சமூர்த்தி வேலைத்திட்டங்கள்
ஏழைகளை ஊக்குவிக்கும் முகமாக சமூர்த்தி வேலைத்திட்டம் உறுவாக்கப்பட்டுள்ளது. பல்வேறு காரணங்களால் இந்நாட்டின் ஏழை மக்கள் நாட்டின் தேசிய அபிவிருத்தி செயற்பாடுகளுக்கு எவ்விதமான பங்களிப்பினையும் வழங்காது வெறுமனே இருக்கும் மக்கள் தொகுதியாக உறுவாகிகொெண்டு வருகின்றனர். இக்காரணங்களால் அவர்கள் இறுதியில் மற்றவர்களில் தங்கிவாழும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதை காணக்கூடியதாக உள்ளது. இருபினும் இந்த அனைத்து நபர்களுக்குள்ளும் மாற்று சக்தி ஒன்று உள்ளது. அவ்வாறு வௌிப்படுத்தாதுள்ள மாற்று சக்கியை வௌிகொணர வேண்டும். அதற்காக அவர்களை இயற்கையாகவே பலமிக்கவர்களாக மாற்றும் செயற்பாடு மக்களை ஊக்குவிக்கும் செயற்பாடாகும். இந்த செயற்பாட்டிற்காக இலங்கையின் ஏழைகளை ஊக்குவிக்கும் செயற்பாட்டிற்காக 1995 ஆம் ஆண்டு இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் பாராளுமன்றம் மூலம் 1995 இலக்கம் 30 கொண்ட இலங்கை சமூர்த்தி அதிகார சபை ஊடாக இந்த சமூர்த்தி வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டது. சமூர்த்தி வேலைத்திட்டத்தினுள் ஏழிமையை ஒழித்து ஏழைகளை ஊக்குவிக்கும் முகமாக விஷேடமாக நடைமுறைப்படுத்தப்படுவது சமூர்த்தி வங்கி சங்க வர்த்தகமாகும். இந்த வங்கி சங்க வர்த்தகமான ஒருவிதமான அமைப்பு சொரூபத்தை உடையது. சமூர்த்தி வங்கி சங்க வர்த்தகத்தினுள் அவ்வாறான உப அமைப்புக்கள் 4 காணக்கூடியதாக உள்ளது. இது 5 பேரை உள்ளடக்கிய உப அமைப்பாகும். சிறிய கிராமம் அடிப்படையில் சமூர்த்தி சமிதி மேலுமொரு உப அமைப்பாகும். வலய அடிப்படையில் வங்கி சங்கங்கள் மேலும் உப அமைப்புகளாவதுடன் சமூர்த்தி மகா சங்கம் மேலுமொரு உப அமைப்பாகும். இங்கு பேசப்படுவது சிறு குழு மற்றும் சமூர்த்தி சமிதி பற்றியதாகும்.
ஐந்து பேர் கொண்ட குழு
ஐந்து பேர் கொண்ட குழு மற்றும் சமூர்த்தி சமிதி ஏழை மக்களை சமூகத்தை நேரடி பங்களிப்பிற்கு ஏற்பாடு செய்வதற்கு உபயோகப்படுத்தும் கீழ் மட்டத்திலான அமைப்பாகும்.
குழு தேவைக்கு அதிகமாக பெரியதாகும் பொழுது அங்கு அங்கத்தவர்களின் சுயநலம் மேம்படும். அதேபோன்று குழுவிற்குள் பாதகமான கூட்டனிகள் உருவாவதற்கு அது காரணமாகும். விஷேடமாக பங்களாதேசத்தின் கிராமிய வங்கி தொடர்பான ஆய்வின் போது இது தௌிவாகியுள்ளது. இந்த கருத்தினை கவனத்தில் கொண்டு சமூர்த்தி வர்த்தகத்தினுள் 5 பேர் கொண்ட குழு முறை ஏற்படுத்தப்பட்டுள்ளது.
சிறு குழுக்கள் ஒன்றுகூடுவது எவ்வாறு?
சிறு குழுக்கள் தத்தமது விருப்பங்களின் அடிப்படையில் ஒன்றினைவதற்கு திட்டமிடுதல் வேண்டும். சுற்றுப்புறவாசிகளாக, சமமான உற்பத்தி செயற்பாடுகளில் ஈடுபடுதல், நட்புறவு போன்ற காரணங்கள் குழு ஒற்றுகூடலின் போது தாக்கம் செய்யும்.
குழு வாரந்தோரும் ஒன்றுசேர்ந்து பேச்சுவார்த்தை மேற்கொள்ளுவதன் மூலம் தாம் முகம் கொடுக்கும் பிரச்சினையை விசாரிப்பதற்கும்,
அவற்றிற்கு தீர்வு தேடிக்கொள்ளுவதற்கும் மிகவும் சிறந்த சுற்றாடல் ஒன்றை உருவாக்குவதற்குமாகும்.
சிறு குழுக்களின் செயற்பாடுகள் எவை?
குழு நிதியொனறினை உருவாக்கிக்கொள்ளுதல், கைமாறல் கடன் பெறுதல், தொழிலாளர் பரிமாற்றல் அடிப்படையில் வேலை செய்துக்கொள்ளல், நுகர்வோர் பண்டங்களை தொகை அடிப்படையில் கொள்வனவு செய்து வினியோகித்தல். வீட்டு உற்பத்தி பொருட்கள் பரிமாற்றம் செய்தல், சீட்டு போடுதல்,
வங்கி சங்கங்கள் கடன் விதந்துரைத்தல் செய்தல், பின் விபர நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல் போன்றன சிறு குழு செயற்பாடுகளில் முக்கியத்துவம் வாய்ததாகும். இந்த செயற்பாடுகளினூடாக குடும்ப பாதுகாப்பினை அனுபவத்தின் மூலம் கற்றுக்கொள்ளுதலாகும்.
அவ்வாறே கலந்துரையாடல்களை குறித்துக்கொண்டு அறிக்கையிட்டுக் வைத்தல், அவற்றை பின் ஆய்வு செய்வதற்கும் கற்றுக்ககொள்வர். இந்த செய்ற்பாட்டின் மூலம் குறைந்த வளங்களைக் கொண்டு உயர்தபட்ச உபயோகத்தினை பெறும் திட்டமிடல் செயற்பாட்டிற்கு ஏழை குடும்பங்களை படிபடியாக ஈடுபடுத்துவதற்கான சந்தர்ப்பம் ஏற்படும்.












